அரசியலும் ஆன்மீகமும் கலந்துவிட்டது..! மத்தியில் பாஜக, மாநிலத்தில் திமுக வேண்டும்! - மதுரை ஆதீனம் பேச்சு!

Prasanth Karthick
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (08:31 IST)

மயிலாடுதுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், ‘மத்தியில் பாஜக ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும்’ வேண்டும் என பேசியுள்ளார்.

 

 

மயிலாடுதுறையில் உள்ள திருக்கடையூரில் பிரபலமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று வெள்ளி ரத தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட இந்த கோவிலின் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மற்ற ஆதீனங்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் “தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலுக்கு வந்துள்ளேன். ஆதீனங்களை ஒன்று கூட்டிய பெருமை அமைச்சர் சேகர்பாபுவையே சேரும்.
 

ALSO READ: அரையாண்டு தேர்வுக்கு முன்பே அரையாண்டு தேர்வு விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை
 

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னதை சேகர்பாபு செய்து காட்டி வருகிறார். பல கோவில்களுக்கு சிறப்பான முறையில் திருப்பணிகள் செய்து வருகிறார். இந்த ஆட்சி வளர வேண்டும். மத்தியில் நரேந்திர மோடி ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்