உன் கடனை அடைக்கிறேன் ; தேர்தலில் போட்டியிடு : விஷாலிடம் கூறினாரா தினகரன்?

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (11:53 IST)
விஷால் தனக்குள்ள கடனை அடைக்கவே தேர்தலில் போட்டியிடுகிறார் என ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.


 
ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.


 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மதுசூதனன் “நடிகர் விஷால் கந்து வட்டி பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார். அவரது படங்களும் வரிசையாக தோல்வி அடைந்து வருகின்றன. கடன் பிரச்சனையை தீர்ப்பதாக கூறி, விஷாலை தினகரன் போட்டியிட வைத்துள்ளார். இதன் மூலம் அதிமுக ஓட்டுகளை அவர் பிரிக்க நினைக்கிறார்.
 
விஷால் அல்ல. வேறு எந்த நடிகர் வந்தலும் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற முடியாது” எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்