பகவத் கீதை மதநூலல்ல; பண்பாட்டு நூல் – அமைச்சர் விளக்கம் !

Webdunia
வியாழன், 26 செப்டம்பர் 2019 (15:31 IST)
பொறியியல் படிப்பில் தத்துவவியல் பாடத்தில் பகவத் கீதையை பாடமாக வைத்ததற்கு தமிழ்த்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை மற்றும் தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையின்படி இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்த பாடங்கள் அறிமுக செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதிமுகவைச் சேர்ந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா பா பாண்டியராஜன் ’ பகவத் கீதையைப் பாடமாக வைத்திருந்தால் அது வரவேற்கத்தக்கதுதான். பகவத் கீதையை மதம் சார்ந்த புத்தகமாக நான் பார்க்கவில்லை. ஒரு பண்பாடு சார்ந்த புத்தகமாக பார்க்கிறேன். இந்தியப் பண்பாட்டுக்கு நங்கூரமாக அமைவது பகவத் கீதைதான். அதனை இஞ்சினீயரிங் மாணவர்களுக்கு பாடமாக வைப்பதை வரவேற்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்