போடா, ஏங்கவிட்டுப் போய்விட்டாயே! - பாடலாசிரியர் அண்ணாமலை நண்பர் உருக்கம்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (17:15 IST)
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான அண்ணாமலை மறைந்ததை அடுத்து அவரது நண்பரும், பத்திரிக்கை எழுத்தாளருமான நெல்லை பாரதி தனது ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துள்ளார்.
 

pப்
அவருடைய முகநூல் பதிவு கீழே:
 
முத்துக்குமாருக்காக சிந்திய கண்ணீரின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள் அடுத்த கதறலுக்கு ஆட்படுத்திவிட்டாயே அண்ணாமலை! 
 
வீட்டுக்குத் தெரியாமல் நட்புக்கு உதவுவதில் முத்துக்குமாரைப் பின் தொடர்ந்தாய். இறப்பிலும் அப்படியே.
 
சார்! என ஆரம்பித்து, அண்ணே! என தொடர்ந்து, பார தீ! என பாசத்தோடு அழைத்தாய். 80 அடிச்சாலை தேநீர்க்கடையிலும், ராஜமன்னார் சாலை மதுபானக் கடையிலும் பல்லவிகள் சொல்லி, கருத்துக் கேட்பாய். 'சுமார்' என்று சொல்வதற்கு சிறுபோதும் வாய்ப்புத் தந்த்தில்லை. 
 
அடுத்தவர் வாய்ப்பைத் தடுக்கும் பாட்டுலகில், ஆசிரிய நண்பன் சண்முகத்துக்கு பரிந்துரைத்த பரந்த மனதுக்காரன் நீ.
 
கபிலன், முத்துக்குமார், இளைய கம்பன், ப்ரியன், விஜய் ஆண்டனி, 'செலவுக்கு ஏதாவது வேணுமா?' - இவையன்றி முடித்ததில்லை உன் உரையாடலை. 
 
மணமாகி 18 ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லா நிலையில், மெளனமாக நீ வடித்த கண்ணீர் 'மெளனா' வடிவில் மகளாய்ப் பிறந்தது.
 
மகள் மெளனா குறித்து நீ உருகிப் பேசும்போது, எனக்கொரு பெண்பிள்ளை இல்லையே என்று ஏங்கியிருக்கிறேன்.
 
போடா! மெளனாவை ஏங்கவிட்டுப் போய்விட்டாயே!
அடுத்த கட்டுரையில்