திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயர்.. ரயிலை கவிழ்க்க சதியா?

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (10:43 IST)
ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பொதுமக்கள் மீளாத நிலையில் திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயர் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மேலவாளாடி என்ற பகுதியில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைக்கப்பட்டதாக தகவல் வெளியானதை எடுத்து உடனடியாக காவல்துறை சென்று லாரி டயரை அப்புறப்படுத்தினர். 
 
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் மூன்று பேரை  சந்தேகம் அடைந்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதீப் குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் இது குறித்து தீவிரல் விசாரணை நடத்த உத்தரவு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்