சமூக வலைதளங்களில் கந்த சஷ்டி கவச விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
யூட்யூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பதிவிட்டு வரும் சூழலில் இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவது குறித்து பலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மனுவாய் சமர்பித்தால் விசாரணை மேற்கொள்வதாக தலைமை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து அளிக்கப்பட்டுள்ள மனுவில் மதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக வீடியோக்கள் பதிவிடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்கலில், யூட்யூபில் தவறான வீடியோக்கள் பரவுவதை தடுக்க அரசு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.