பாடம் நடத்த 14 சேனல்கள் ரெடி! விரைவில் அறிவிப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்!

புதன், 15 ஜூலை 2020 (11:13 IST)
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்த 14 சேனல்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 1 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட பாடங்களை தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தங்களது மாணவர்களுக்கு நடத்த தொடங்கியுள்ளன. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கும் பாடம் நடத்த அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஆன்லைன் மூலமாக படிக்க அனைத்து மாணவர்களுக்கும் வசதி இருக்காது என்பதால் தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் கொரோனா பாதிப்புகள் குறையும் பட்சத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியும் உள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “பள்ளிகள் திறப்பது தற்போதைக்கு சாத்தியமில்லாதது. மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 14 சேனல்கல் பாடங்களை ஒளிபரப்ப முன் வந்துள்ளனர். இன்னும் 3 தினங்களில் பாடம் நடத்தும் பணி முழுமையாக தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்