தமிழ்நாடு ஆளுனர் ஆர்என்.ரவி அவ்வப்போது, அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டு அவர் பேசுவது விமர்சனர்கள் ஏற்படுத்தி வரும், நிலையில். சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாநிலத்தின் பெயரரான தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்' என தெரிவித்திருந்தார்.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளார் டிகேஎஸ் இளங்கோவன், மகாராஷ்டிரம் என்றால் என்ன? இந்தியாவை விட பெரிய நாடு என்று பொருள். மகாராஷ்டிரத்தின் பெயரை முதலில் மாற்றச் சொல்லுங்கள். பிறகு தமிழ்நாட்டிற்கு வரலாம்என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், தன் டுவிட்டர் பக்கத்தில், #தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல்-மொழியியல்-அரசியல்-பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்! என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், தமிழ் நாடு வாழ்க என்று, தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் பதிவிட்டுள்ளார்.