தீவிர கண்காணிப்பில் முதல்வர் ஜெயலலிதா: விரைந்தது லண்டன் மருத்துவக் குழு!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (16:11 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் கிரிட்டிகல் கேர் யூனிட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.


 
 
தற்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த 22-ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் நலமுடன் இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவ ஆரம்பித்தது. பின்னர் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
 
நேற்று முதல்வருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அதற்கு மருத்துவர் சிவக்குமார் தலைமையில் அப்பல்லோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை லண்டனில் இருந்து வந்த சிறப்பு மருத்துவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
 
லண்டன் சிறப்பு மருத்துவரின் தீவிர சிகிச்சையில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு மருத்துவமனை வட்டாரத்தில் நிலவி வருகிறது. நாமும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் பெற்று வீடு திரும்பி தனது வழக்கமான பணிகளை தொடர வேண்டுவோம். முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க ஒட்டுமொத்த தமிழகமே காத்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்