நெல்லையில் 16 வயது பள்ளி மாணவிக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் வசிக்கும் முத்துக்குட்டி என்ற 65 வயது முதியவர், 16 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
கடந்த சில வருடங்களாக நெல்லை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், பாலியல் தொல்லை கொடுத்த முத்துக்குட்டிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு தரப்பில் மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட முத்துக்குட்டிக்கு, ஏழு ஆண்டுகள் கழித்து இந்த ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பை தொடர்ந்து, போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த தீர்ப்பு நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.