மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்... மகிழ்ச்சி தொடர் கதையாகட்டும்! – ராமதாஸ் டுவீட்

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (15:26 IST)
தமிழகத்தில் கொரொனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு பல நடவடிக்கைகள எடுத்து வருகிறது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தடுக்கவும் , இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து விளையாடுவதைத் தடுக்கவும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டி போலீஸாரும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து தொழில்களு,ம் முடங்கியுள்ளது.
மதுக்கடைகளும் ஊரடங்கு முடிந்த பிறகுதான் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென  பாமக தலைவர் ராமதாஸ் கூறிவரும் நிலையில், இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்... மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும்!" தமிழகத்தில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் நாளில் இருந்து, முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஊரடங்கால்  ஊரடங்கால் பல நன்மைகளும் விளைந்துள்ளது. இதில் முக்கியமாக மது பிரியர்கள் மதுவை மறந்திருப்பதுதான் என தெரிவித்துள்ளார்.

மேலும், மதுப்பிரியர்கள் மது இல்லாமல்  வாழ இயலும் என்று தெரிவித்துள்ள ராமதாஸ், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றின் மூலம் நிச்சயம் அது சாத்தியமாகும் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்