பாசிசம் வீழட்டும் - இந்தியா வெல்லட்டும்- அமைச்சர் உதயநிதி!

Sinoj
வியாழன், 22 பிப்ரவரி 2024 (21:29 IST)
திமுக இளைஞரணி-ன் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது இந்த மாநாட்டிற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றக் கூட்டத்தை குறிஞ்சி இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் நிர்வாகிகளுக்கு நினைவுப்பரிசு பரிசுகள் வழங்கி உரையாற்றினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இதுகுறித்து அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

''மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி, இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில், திமுக இளைஞரணி-ன் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக அமைவதற்கு வழிகாட்டிய கழக பொதுச் செயலாளர் - பொருளாளர் - முதன்மைச் செயலாளர் - துணை பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் - மாநாட்டுக்காக உழைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் - கழக அணிகளின் செயலாளர்கள் - தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றக் கூட்டத்தை குறிஞ்சி இல்லத்தில் இன்று நடத்தினோம். மாநாடு அறிவித்த நாள் முதல், இளைஞரணி செயல்வீரர் கூட்டம் - நீட் விலக்கு, நம் இலக்கு கையெழுத்து இயக்கம் - மாநாட்டு நிதி - இரு சக்கர வாகனப் பேரணி - உரிமை மீட்பு சுடர் ஓட்டம் - லட்சக்கணக்கான இளைஞர்களின் வருகை என்று மாநாட்டிற்கான ஒவ்வொரு பணிகளையும் ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் - பொறுப்பு அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து நினைவுப்பரிசை வழங்கினோம்.

பாசிசம் வீழட்டும் - இந்தியா வெல்லட்டும் என்ற உணர்வோடு ஓரணியில் நின்று, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக உழைப்போமென உரையாற்றியதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்