அரசு பேருந்துகளை எங்களை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது: தொழிற்சங்கத்தினர் கருத்து

Siva

செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:24 IST)
காலாவதியான அரசு பேருந்துகளை எங்களைத் தவிர வேறு யாராலும் ஓட்ட முடியாது என தொழிற்சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 போக்குவரத்து துறையினர் நடத்திவரும் வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல பகுதிகளில் பேருந்துகள் மிகவும் குறைவாக இயங்குகிறது. இந்த நிலையில் திருச்சியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்தம் குறித்து கூறிய போது ’காலாவதியான ஆகியுள்ள அரசு பேருந்துகளை எங்களைத் தவிர வேறு யாராலும் இயக்க முடியாது என்று கூறியுள்ளனர். 
 
திருவண்ணாமலையில் நேற்று இரவு 11 மணி அளவில் இருந்து அரசு பேருந்துகள் 80 சதவீதம் முடங்கியதாகவும் இதனால் மக்கள் மிகவும் அவதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால்  பக்தர்கள் பேருந்து நிலையத்திலேயே தூங்கும் அவல நிலை திருவண்ணாமலையில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிகவும் குறைந்த அளவு பேருந்துகள் இயங்குவதால் பெரும்பாலான பொதுமக்கள் பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்