மயிலாடுதுறை மற்றும் அரியலூரில் நடமாட்டம் செய்து வரும் சிறுத்தை ஒரு வாரமாக சிக்காத நிலையில் தற்போது கடலூர் வரை தேட வனத்துறையினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இதைஅடுத்து மயிலாடுதுறையிலிருந்த சிறுத்தை சமீபத்தில் அரியலூர் சென்று விட்டதாகவும் அங்கு தான் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக போக்கு காட்டி வரும் விசிறத்தை இருப்பிடத்தை இன்னும் கண்டறிய முடியவில்லை என்ற நிலையில் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் வரை எல்லையை விரிவுபடுத்தி தேடும் பணியில் தீவிரமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கடந்த ஒரு வாரமாக சிறுத்தை தென்படாததால் தேடும் எல்லையை விரிவுபடுத்தி இருப்பதாகவும் விரைவில் சிறுத்தை பிடிபடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு மேலாக சிறுத்தை பிடிவாமல் இருப்பதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.