பிடிபடாமல் இருக்கும் சிறுத்தையால் கொல்லப்பட நரி.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Mahendran

செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (14:08 IST)
கும்பகோணம் அருகே, இறந்த நிலையில் நரியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறையில் பிடிபடாமல் இருக்கும் சிறுத்தை தாக்கி உயிரிழந்ததா என விசாரணை நடந்து வருகிறது.
 
கும்பகோணம் அருகே, திருமலைராஜபுரத்தில் இருந்து மல்லபுரம் செல்லும் சாலையில் நரியின் உடல் வனத்துறை அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து 
மயிலாடுதுறையில் வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை தஞ்சை மாவட்ட எல்லையில் தென்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நரியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் சிறுத்தையால் கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
மேலும் நரியின் உடல் அருகே உள்ள கால் தடத்தை வைத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைசியாக சிறுத்தை தென்பட்ட கஞ்சிவாய் பகுதியில் இருந்து கும்பகோணம் 20 கி.மீ. தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்