சேகர் ரெட்டியின் டைரியில் பிரபல பத்திரிகையாளர்கள் பெயர்கள் உள்ளதா?

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (18:35 IST)
சேகர் ரெட்டியின் டைரி என்று கூறப்படும் டைரியில் ஓபிஎஸ் உள்பட ஐந்து அமைச்சர்கள் பெயர்கள் இருந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் அந்த டைரியின் அடுத்தடுத்த பக்கங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் முன்னணி பத்திரிகையாளர்களின் பெயர்களும் இருப்பதாக கூறப்படுகிறது

தமிழின் இரண்டு முன்னணி செய்தி சேனல்களின் தலைமை ஆசிரியர்களின் பெயர்கள், சமீபத்தில் விஜய்யின் சுறா படம் குறித்து சர்ச்சைக்குரிய விவகாரத்தில் சிக்கிய பெண் பத்திரிகையாளரின் பெயர் உள்பட பலரின் பெயர்கள் இருப்பதாக அந்த டைரியின் அடுத்தடுத்த பக்கங்கள் என்று கூறப்பட்டு அவைகளின் புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் டுவிட்டரில் வெளியாகியிருக்கும் இந்த பக்கங்களை உண்மையில் டைம்ஸ் நெள வெளியிட்டதா? அல்லது வேறு மர்ம நபர்கள் வெளியிட்டு வருகிறார்களா? என்பதும் புரியாத புதிராக உள்ளது

இந்த டைரியின் பக்கங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாவிட்டாலும், இவை ஒருவேலை உண்மையாக இருந்தால் நான்காவது தூண் என்று கூறப்படும் பத்திரிகையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழ வாய்ப்பு உள்ளது. யாரைத்தான் நம்புவது என்றே தெரியவில்லை என்பதே இப்போதைய பலருடைய நிலைமை
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்