குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

Mahendran

வெள்ளி, 23 மே 2025 (10:17 IST)
குழந்தையை கொலை செய்த கொலைகாரனுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்த வக்கீலின் குழந்தையையும், அதே நபர் கொலை செய்த சம்பவம் பரமக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பரமக்குடி பகுதியைச் சேர்ந்த தேசிங்கு ராஜா - லெமோரியா தம்பதியின் குழந்தை, வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, சஞ்சய் என்பவர் அந்த குழந்தையை தூக்கிச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்தார். அதன் பிறகு, தலையை தனியாக அறுத்து வீசியதாக தெரிகிறது.
 
இதைக் பார்த்த அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், சஞ்சய் காவல்துறையிடம் சென்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், சஞ்சய் மீது ஏற்கனவே சில கொலை வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. அந்த வழக்குகளில் இருந்து ஜாமீன் பெறுவதற்காக, ஒரு வக்கீல் உதவி செய்துள்ளார். அவர், சஞ்சய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என மருத்துவ சான்று பெற்று, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஜாமீனும் பெற்றுக் கொடுத்தார்.
 
ஆனால் தன்னை பைத்தியம் என்று எல்லோரும் கேலி செய்வதை காரணமாக கொண்டு, சஞ்சய் அந்த வக்கீலின் குழந்தையையும் கொடூரமாக கொலை செய்ததாக தெரிய வருகிறது.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்