ஏமாற்றுவது எப்படி? ஸ்டாலினை கலாய்த்த முருகன்!

செவ்வாய், 9 மார்ச் 2021 (10:32 IST)
எப்படி ஏமாற்றுவது என்று ஸ்டாலினிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் என தமிழக பாஜக தலைவர் முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

 
சென்னை கோயம்பேட்டிலுள்ள தமிழக பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், எல்லா அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக வேளை செய்கிறார்கள். 
 
ஆனால் ஒரு கட்சி மக்களை ஏமாற்றுவது என்று  சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் நேற்று அறிவித்த 7திட்டங்கள் மத்திய அரசு செயல்படுத்திக்கொண்டுள்ள திட்டம் நகர்புறங்களில் புதியாக 36லட்சம் இணைப்பு என்கிறார்.
 
ஆனால் மத்திய அரசு இதை செய்து வருகிறது இன்னும் ஒருகோடி பேருக்கு செய்துகொடுக்க உள்ளது. எப்படி ஏமாற்றுவது என்று ஸ்டாலினிடன் தான் கற்றுக்கொள்ள வேண்டும். எழில் மிகு நகரங்களை உருவாக்குவோம் என்கிறார். ஸ்மாட் சிட்டி திட்டம் ஏற்கனவே பல்வேறு நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
 
அனைவருக்கும் வீடு என்பது மத்திய அரசின்  திட்டம் அதையும் செய்வேன் என்கிறார். 2.5லட்சம் பயன்பெறும் வகையில் இன்டெர்நெட் இணைப்பு வழங்க திட்டமிட்டு 1.8லட்சம் கொடுத்தாகி விட்டது. பட்டியல் இன மாணவர்களை பற்றி பேசுகிறார், பட்டியலினத்தை பற்றி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. நீதிபதியை கொச்சைப்படுத்தியவர் திமுக எம்.பி மத்திய அரசு கொடுக்கும் திட்டத்தை இவர் கொடுக்கப்போவதாக சொல்கிறார்.
 
18 ஆயிரம் உதவி தொகை 35ஆயிரமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. எம்ய்ஸ் கொண்டு வர கனவிலும் நினைக்கவில்லை இவர்கள், மகா ஊழல், மெகா ஊழல் , காற்றில் ஊழல் என திமுக-காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி இருந்த போது நினைக்கவில்லை. 
 
1.25 கோடி மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை தவிர்க்க நவீன இயந்திரம் வாங்க ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. விவசாயிகள் விலையை நிர்ணயம் செய்யலாம் என திருத்த சட்டத்தை எதிர்த்து பந்த் நடத்தியவர் ஸ்டாலின். ஏமாற்றுவது எப்படி என்பதை ஸ்டாலினிடமும் திமுமவிடமும் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
 
எழை மக்களுக்கு விவசாயிகளுக்கு 2 ஏக்கர் கொடுப்பதாக சொன்னார்கள் செய்தார்களா? திமுக நாங்கள் உங்கள் நிலங்களை அபகரிக்கமாட்டோம் என்று கொடுத்திருந்தால் நம்புவார்கள் மக்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை. மாதம் 1000 கொடுப்பதாக சொல்கிறார் இது எப்படி கொடுப்பார் என்பதை பார்த்துவிடுவோம். விவசாய கடனை ரத்து செய்வதாக கூறினார் பல குடும்பங்கள் இவர்களை நம்பி இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். 31.6 லட்சம் பேருக்கு இலவச கேஸ் இணைபு கொடுத்துள்ளது மத்திய அரசு.
 
இலவச கழிப்பறை வசதி , விவசாயிகள் ஊக்கத்தொகை 6000 ரூபாய் கொடுத்துள்ளோம். ஏற்கனவே மத்திய அரசு நடைமுறைப்படுத்துகின்ற திட்டங்களை  செய்ய போவதாக சொல்லி ஏமாற்றுகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல், கமிஷனும் பிரிக்கமுடியாத ஒன்று கட்ட பஞ்சாயத்து பண்ணுவது அவர்கள் வழக்கம். 
 
தமிழ் மக்களை கொச்சைப்படுத்தால் அவர்களால் இருக்க முடியுமா? முடியாது. நிச்சயமாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல்வர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை ஆக்கமுடியுமா? கட்சியின் தலைவராக்க முடியுமா? கேள்வி கேட்ட பெண்ணை தாக்கியவர்கள் பெண் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். 
 
வாரிசு அரசியலை செய்யமாட்டோம் என சொல்லமுடியுமா?  போலியான நாடங்களை  நடத்துகிறார் ஸ்டாலின். மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக இருக்கும். உங்கள் விருப்பம் எங்கள் அறிக்க என்ற பெயரில் பொதுமக்களிடம் கேட்டு அறிக்கை வெயிடுவோம் நாளை முதல் மூன்று நாட்கள் இதனை செய்யவுள்ளோம். 
 
உரிமைதொகையாக 1000 கொடுப்போம் என்பது சாத்தியமில்லாத ஒன்று. சமூக நீதி பற்றி பேசும் ஸ்டாலினிடம் தான் கேட்கிறேன் தலித் ஒருவரை முதல்வராக்க முடியுமா என்று தான் நான் கேட்கிறேன் என விமர்சித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்