தமிழிசை சௌந்தர்ராஜன் தாயார் மறைவு! – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

புதன், 18 ஆகஸ்ட் 2021 (09:56 IST)
தெலுங்கான ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜனின் தாயார் மறைவிற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா அளுனரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான தமிழிசை சௌந்தர்ராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். மறைந்த கிருஷ்ணகுமாரி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் துணைவியார் என்பதால் காங்கிரஸ் – பாஜக இருதரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் “தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி. டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் தாயார் திருமதி கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். மறைந்த திருமதி கிருஷ்ணகுமாரி, மூத்த காங்கிரஸ் தலைவர் திரு.குமரி அனந்தன் அவர்களின் துணைவியார் ஆவார். அன்புத் தாயாரை இழந்து வாடும் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்