பெரியார் சாலை பெயர் மாற்றத்தின் பின்னணியில் பாஜகவா? எல் முருகன் விளக்கம்!

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:35 IST)
சென்னையில் பெரியார் ஈ வே ரா சாலை கிராண்ட் வெஸ்டர்ன் சாலை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது பலத்த கண்டனங்களைப் பெற்றது.

சென்னையில் முத்துசாமி பாலத்தில் தொடங்கி மதுரவாயல் சந்திப்பு வரை தொடரும் 14 கிமீ நீளமுள்ள பிரதான சாலை பெரியார் ஈ.வே.ரா சாலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. சென்னையின் முக்கிய பிரதான சாலையான இந்த சாலையின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி பெரியார் ஈ.வே.ரா சாலை Grand Western Trunk Road என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகையில் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து மீண்டும் அந்த சாலைக்கு பழைய பெயரே வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த பெயர் மாற்றத்திற்கு பின்னணியில் பாஜக செயல்படுகிறதா என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் எல் முருகன் இல்லை என பதிலளித்துள்ளார். மேலும் நெடுஞ்சாலை துறை அறிவிப்பில் Grand western Road என்ற பெயர் முன்பில் இருந்தே உள்ளது. அதை ஆட்சியில் இருந்த போது திமுக ஏன் மாற்றவில்லை எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்