எல்லை மீறிய இரண்டாம் அலை; மேலும் கட்டுப்பாடுகள்? – தலைமை செயலாளர் ஆலோசனை

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:26 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போதைய ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள், கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற செய்தல், இல்லாவிட்டால் அபராதம் விதித்தல் போன்றவற்றையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் கொரோனா இரண்டாம் அலை கைமீறி விட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் இன்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த அலோசனையில் தமிழகம் முழுவதும் இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்