மீண்டும் திமுகவில் சேருகிறாரா குஷ்பு?

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (21:10 IST)
நடிகை குஷ்பூ மீண்டும் திமுகவில் சேர இருப்பதாக தமிழகத்தில் அரசியல் வட்டாரங்களில் ஒரு வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகை குஷ்பு முதன்முதலாக அரசியலில் இணையும்போது திமுகவில் இணைந்தார். கருணாநிதி முன்னிலையில் அவர்கள் இணைந்தபோது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் திடீரென அவர் முக ஸ்டாலினை பகைத்து கொண்டதால் அவரால் திமுகவில் தொடர முடியவில்லை
 
இதனை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு ஓரளவு மதிப்பு இருந்தாலும் தமிழக காங்கிரஸ் கட்சி அவருக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்ததாக கூறப்பட்டது. மேலும் அவருக்கு எந்தவிதமான பதவியும் அளிக்கப்படவில்லை 
 
இதனை அடுத்து அதிருப்தி காரணமாக காங்கிரஸில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். பாஜக வேட்பாளராக சென்னை திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் திமுகவில் சேர இருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்