தமிழகம் தானே அலட்சியப்படுத்தினால் அதற்கான விலையை வேண்டியிருக்கும்: கே.எஸ்.அழகிரி

புதன், 18 மே 2022 (21:34 IST)
தமிழகம் தானே அலட்சியப்படுத்தினால் அதற்கான விலையை வேண்டியிருக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
ஜவுளித் தொழிலின் முக்கிய மூலப்பொருளான பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியின் காரணமாக உள்நாட்டில் பருத்தி தட்டுப்பாடு ஏற்பட்டு வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று மாதங்களில் நூல் விலை கிலோ ஒன்றுக்கு 250 வரை கூடுதலாக உயர்ந்துள்ளது.
 
மத்திய அரசின் தவறான பஞ்சு ஏற்றுமதி கொள்கையின் காரணமாகவும் ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிகளின் பதுக்கல் காரணமாகவும் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி லாபம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு மத்திய அரசு உடந்தையாக இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
பருத்தி நூல் விலையை செயற்கையாக உயர்த்திவிட்டு, செயற்கை நூலிழை சந்தை திருப்பூரில் அடி எடுத்து வைக்க மத்திய அரசு காரணமாக இருக்கிறது.  7 மெகா ஜவுளித்திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த திட்டம் செயற்கை நூலிழை உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவே உள்ளது.
 
ஏற்கெனவே மோடி அரசின் அவசர, அலங்கோல ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டலம் அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில்,  பருத்தி நூல் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விஷயத்திலும் தமிழகம் தானே என்று மோடி அரசு அலட்சியப் போக்கை கடைபிடித்தால், அதற்கான விலையை நிச்சயம் தர வேண்டியிருக்கும்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்