உங்க கடனை அடுத்த ஆட்சி தலையில் ஏற்றுவதா? – கே.எஸ்.அழகிரி ஆவேசம்!

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:56 IST)
தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் முடிந்த நிலையில் அடுத்த ஆட்சிக்கு கடன் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சி, கிராமப்புற வீட்டு வசதி, மருத்துவம், கல்வி என பல துறைகளுக்குமாக நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “தமிழக விவசாயிகளின் பயிர்க் கடன் ரூபாய் 12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், இடைக்கால பட்ஜெட்டில் ரூ 5 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மீதி ரூ 7,110 கோடியை அடுத்து தமிழகத்தில் அமையப் போகிற ஆட்சியின் மீது சுமத்துவதற்கு அ.தி.மு.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்