அனிதா மரண விவகாரத்தில் அரசியல் செய்யும் கிருஷ்ணசாமி..

வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (17:54 IST)
மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ள கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதா 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்தார். இவரது மருந்துவ கட் ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7 ஆகும். இந்நிலையில், மத்திய அரசு நீட் தேவு மூலம் மருத்துவ படிப்பிற்கான சீட் வழங்கப்படும் என அறிவித்தது. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட் ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே.  
 
பின்னர் நீட் தேர்விற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தன்னையும் ஒரு மனுதாரராக அவர் இணைத்துக்கொண்டார். இந்நிலையில்தான், இன்று அவர் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்தார்.


 

 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள புதிய தமிழகம் கிருஷ்ணசாமி “தற்கொலைக்கான காரணம் தெரியாமலேயே அது வேறு ஒன்றோடு முடிச்சுப் போடப்படுகிறது. மேலும், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஒரே வழி தான்; அனிதாவிற்கு மட்டும் தனி வழி கிடையாது ” எனக் கருத்து கூறியிருந்தார்.
 
சமீபகாலமாக அவர் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வருவதால், அவர் இப்படி கருத்து தெரிவித்துள்ளார். இது ஏற்க முடியாதது என பலரும் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்