ரஜினியை வைத்து திமுக சீனியர்களை அவமதிக்கிறார் முதல்வர்: கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு..!

Mahendran
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (14:46 IST)
ரஜினியை வைத்து திமுகவில் உள்ள சீனியர்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவமதிக்கிறார் என அதிமுகவின் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி  புத்தகம் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், முதல்வரை புகழ்ந்து பேசி உள்ளதோடு திமுகவில் உள்ள சீனியர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது தந்தையின் ஆட்சியில் பல்வேறு பதவிகள் வகித்து அதன் பிறகு தான் முதல்வராக உள்ளார். ஆனால் எம்ஜிஆர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அடிப்படை உறுப்பினராக இருந்து படிப்படியாக உயர்ந்து பொதுச்செயலாளர் ஆகியுள்ளவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் இதெல்லாம் ரஜினிக்கு தெரியாது என்றும் முதல்வரை புகழ வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் தான்தோன்றித்தனமாக பேசியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

திமுகவில் உள்ள சீனியர்களை வெளியேற்ற முடியாத தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ரஜினிகாந்த்தை அழைத்துப் பேசவிட்டு சீனியர்களை அவமானப்படுத்தி இருப்பதாக எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றும் திமுகவுக்காக நீண்ட காலம் உழைத்த துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வெளியேற வேண்டும் என்று ரஜினியை வைத்து முதல்வர் அவமானப்படுத்தி உள்ளார் என்றும் இதுபோன்று இரண்டாம் கட்ட தலைவர்களை அதிமுக ஒருபோதும் அவமதித்தது இல்லை என்றும் அவர் கூறினார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்