கொரோனா நோயாளிகள் எக்கச்சக்கம்.. செவிலியர்கள் குறைவு! – கோவை மருத்துவ கல்லூரியில் போராட்டம்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (08:54 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் கோவை மருத்துவ கல்லூரியில் கூடுதல் செவிலியர்களை நியமிக்க கோரி போராட்டம் நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஆனால் அதற்கேற்ற அளவு செவிலியர்கள் இல்லை என்பதால் தற்போது பணிபுரியும் செவிலியர்களுக்கு பணிச்சுமை கூடுதலாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்