இதனையடுத்து வார்டன் புனிதா மற்றும் விடுதியின் உரிமையாளர் ஜெகந்ந்தாதன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இருவரும் தலைமறைவாகினர். புனிதா, ஜெகந்நாதன் ஆகிய இருவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலைமறைவாக இருந்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன், ஆலங்குளம் கிணறு ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.