பத்திரகாளி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் நேர்த்தி கடன்-1359 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை!

J.Durai
வியாழன், 11 ஏப்ரல் 2024 (14:44 IST)
குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில்  ஆண்டுதோறும் மீனபரணி நாளில் அதாவது மாசி மாதம் பரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம்.
 
இந்த ஆண்டுக்கான தூக்க திருவிழா ஏப்ரல் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின்  முக்கிய நிகழ்வான 1359  பச்சிளம் குழந்தைகளின் இன்று தூக்க நேர்ச்சை  வெகு விமரிசையாக தொடங்கியது. 
 
இந்த கோயிலில் குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை பிறந்தால்  இந்த கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்துவதாக  வேண்டுதல் வைப்பதும் அதே போல பிறந்த குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழவும் ஒரு வயதிற்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேற்சை நடத்தப்படுவது குறிப்பிட தக்கது. 
 
அப்படி பிறந்த குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தபட்டு வருகின்றன. 
 
சுமார் 50 அடி உயரம் கொண்ட இரண்டு தூக்க வில்லில் ஒரு குழந்தைக்கு ஒரு தூக்கக்காரன் என நான்கு குழந்தைகள் மற்றும் நான்கு தூக்க காரர்கள் குழந்தைகளை கையில் பாதுகாப்பாக ஏந்தி அந்தரத்தில் தொங்கிய வண்ணம் தூக்க வில்லு என அழைக்கப்படும் தேரை மூலவர் கோவிலை ஒரு முறை சுற்றி வரும்போது நேர்த்தி கடன் நிறைவடையும். இவ்வாறு இந்த ஆண்டு 1359 குழந்தைகளுக்கு ஆன நேர்ச்சை இன்று காலை 6.30 மணி அளவில் தொடங்கியது. 
 
இந்த தூக்க நேர்ச்சை திருவிழாவில்  தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து லட்சகணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்