எங்களுக்கு எதிராக தந்திரம் செய்றாங்க.. நாங்க அப்படி கிடையாது! – கே.என்.நேரு விளக்கம்

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (15:00 IST)
இந்து மத கடவுள்களை இழிவுபடுத்திய விவகாரத்தில் திமுகவினரை தாக்கி சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவும் நிலையில் இதுகுறித்து திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு.

சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் இந்து மத கடவுளான முருகன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து மத அமைப்புகள் சில காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், நீதிமன்றத்திலும் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் பலர் தி.க, திமுக கட்சிகள் பொதுவெளியில் இந்து கடவுள்களை விமர்சித்து பேசியது குறித்த வீடியோக்களும் பகிரப்பட்டுள்ள நிலையில், திமுகவிற்கு எதிரான ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன. இதற்கு திமுகவினரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு “சமூக வலைதளங்களில் திமுகவிற்கு எதிராக நடக்கும் தந்திர அரசியலை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழர்கள் முன்னேறிவிட கூடாது என நினைப்பவர்கள் காலம்காலமாக சொல்லி வந்த அவதூறுகள் இன்றைக்கு மீண்டும் இணையதளங்களில் பரப்பப்படுகின்றன. திமுக கொள்கைகள் யாருடைய மனதையும் புண்படுத்துபவை அல்ல” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்