அறுந்து கிடந்த மின்வயர்: மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் 2 சிறுமிகள் பலி

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (14:27 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மின் வயர்கள் ஆங்காங்கே அறுந்து கிடப்பது, மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



 
 
இந்த நிலையில் சென்னை அருகே உள்ள கொடுங்கையூரில் என்ற பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் யுவஸ்ரீ, பாவனா என்ற சகோதரிகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்வயரில் கால் வைத்ததால் இருவரும் தூக்கியடிக்கப்பட்டனர்.
 
உடனடியாக அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதிலும் சிகிச்சையின் பலனின்றி சகோதரிகள் இருவரும் மரணம் அடைந்தனர். மின்வயர் அறுந்து கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தும் மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இரண்டு அப்பாவி சிறுமிகளின் உயிர்கள் பலியாகிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்