தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் - வைரலாகும் ராகுல் காந்தி புகைப்படங்கள்

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (14:14 IST)
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தற்காப்பு கலையில் பயிற்சி பெறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
சமீபத்தில் டெல்லியில் ஒரு விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, தான் ஜப்பானின் தற்காப்பு கலையான ‘அகிடோ’-வில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளேன் எனக் கூறியிருந்தார். மேலும், அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறியிருந்தார்.


 

 
இந்நிலையில், இவர் அகிடோ பயிற்சி பெறும் புகைப்படங்களை காங்கிரஸ் நபர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.



தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்