உன் அம்மாவ பார்த்து அப்படி பேசுடா: குஷ்பு காட்டம்!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (12:51 IST)
நடிகையும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிஜங்கள் என்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்க்கும் பஞ்சாயத்து செய்யும் இந்த நிகழ்ச்சி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பல சினிமா பிரபலங்களே இதனை விமர்சித்துள்ளனர். அதிலும் நடிகை குஷ்பு அந்த நிகழ்ச்சியில் ஒருவரின் சட்டையை பிடித்து அடிக்க கை ஓங்கியது மேலும் சர்ச்சைக்கு எண்ணை ஊற்றியது.
 
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் என திடீரென ஒரு தம்பதிகள் சொந்த கொண்டாடி வருகின்றனர். அவர்களை வைத்து நடிகர் தனுஷ் விவகாரத்தை பஞ்சாயத்து செய்து அதனை நிஜங்கள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள்.
 
இதனையடுத்து பலரும் நடிகை குஷ்புவை அவரது டுவிட்டர் பக்கத்தில் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். பலர் தகாத வார்த்தைகளை கூறி அவரை திட்டுகின்றனர். ஆனால் அதற்கு சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார் குஷ்பு.


 
 
தகாத வார்த்தைகளை உபயோகித்து திட்டுபவர்களை அவர்களுடைய பாணியிலேயே திட்டி விரட்டுகிறார் குஷ்பு. ஆனால் சில டுவிட்டுகள் ஆபாசமாக இருக்க, அதற்கு சற்று காட்டமாகவும் பதில் அளித்து பின்னர் அந்த பதிவுகளை நீக்கவும் செய்கிறார். ஒரு பக்கம் அவருக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தில் போர்க்களமே வெடிக்கிறது.
 
அடுத்த கட்டுரையில்