கருப்பு பணத்தை வெள்ளையாய் மாற்ற வேண்டுமா??

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (12:45 IST)
கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுகளை வெள்ளையாக மாற்றிக் கொள்ள மத்திய அரசு ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது.


 
 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த பின்னர் மக்கள் தங்களிடன் உள்ள ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் கணக்கில் காட்டப்படாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மத்திய அரசு பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. 
 
இந்த திட்டத்தின் மூலம் கணக்கில் வராத தொகையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன்பாக வங்கியில் டெபாசிட் செய்து 50 சதவீதம் வரி மற்றும் அபராதம் செலுத்தி அந்த தொகையை வெள்ளையாக மாற்றிக்கொள்ளலாம் என மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.
 
பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை 12.44 லட்சம் கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்