கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழகம் முதலிடம்

Sinoj

திங்கள், 22 ஜனவரி 2024 (21:25 IST)
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடந்து வரும் நிலையில் பதக்க பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கேலோ இந்தியா போட்டிகளை கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டிலுள்ள விளையாட்டு அரங்கங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள  நிலையில் இப்போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மா நிலங்களைச் சேர்ந்த 6,500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் - வீராங்கனையர் பங்கேற்று கோலோ இந்தியா விளையாட்டில் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

அதன்படி, தமிழகம் 6 தங்கம், 2 சில்வர், 5 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களுடன்  முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா 4 தங்கம், 6 சில்வர், 11 வெண்கலம் என 21 பதக்கங்களுடன் 2 வது இடத்திலும், ஹரியானா: 4 தங்கம், 4 சில்வர், 8 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் 3 வது இடத்தில் உள்ளது. டெல்லி 3 பதக்கங்கள், குஜராத் 2பதக்கங்கள், மணிப்பூர் 8 பதங்கங்கள், வெஸ்ட் பெங்கால் 1 பதக்கத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்