சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: ராயப்பேட்டை அஜந்தா மேம்பாலம் இடிப்பு..!

Mahendran

செவ்வாய், 23 ஜனவரி 2024 (13:10 IST)
சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக ராயப்பேட்டையில் உள்ள அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் மேம்பாலத்தை இடிக்கும் பணி நடைபெறுகிறது. 
 
மேலும் மேம்பாலம் இடிப்பு பணி காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மயிலாப்பூர், மந்தவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்காக அஜந்தா பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
 
இந்த மேம்பாலத்தை இடிப்பதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்ட நிலையில் இந்த பணிகள் இன்னும் சில மாதங்கள் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அஜந்தா மேம்பாலத்தை இடிப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் எதிர்ப்பை மீறி பாலம் இடிக்கப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்