கடைக்கு செல்லும்போது கூட சான்றிதழை எடுத்து செல்ல வேண்டும்: கேரள அரசு நிபந்தனை

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (07:45 IST)
கடைக்குச் செல்ல வெளியே செல்லும் போது கூட கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை கையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து எடுத்து வருகிறது 
அதன்படி கடைகள், மார்க்கெட்டுக்கள், வங்கிகள், சுற்றுலா, வியாபாரம் நிமித்தமாக வெளியே செல்பவர்கள் தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும் இவை இரண்டும் இல்லாமல் வெளியே செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது 
 
கேரள அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கேரளாவில் 42 சதவீதம் பேர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு மக்களை பாதிக்கும் என்றும் இதனை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்