கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஆளுங்கட்சி பிரமுகர்; ஊர்மக்கள் உண்ணாவிரதம் போராட்டம்

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (18:58 IST)
கரூர் அருகே பெரியக்குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள கோயிலின் நிலத்தை அதிமுக அம்மா பேரவை செயலாளர் செல்வராஜ் ஆக்கிரமிப்பு செய்ததால் அதைக்கண்டித்து ஊர்மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


 


கரூர் அருகே பெரியக்குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ருக்மணி சமேத பண்டரிநாதன் திருக்கோயிலின் நிலத்தை அப்பகுதியை சார்ந்த ஆளும் கட்சி பிரமுகரான நகர அ.தி.மு.க அம்மா பேரவை செயலாளர் செல்வராஜ் என்கின்ற மகேஷ் செல்வம் என்பவர் ஆக்கிமித்ததோடு, கழிவு நீர் குழாய் இணைப்பை உடைத்தும், சேதப்படுத்தியும் தற்போது புதிதாக கோயில் இடத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் ஆளும் கட்சி பிரமுகரான செல்வராஜ் என்கின்ற மகேஷ் செல்வம் என்பவரது போக்கினை கண்டித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜுடம் மனுக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளும் கட்சி என்பதினால் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என பலதரப்பினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் பஜனை பாடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அடுத்த கட்டுரையில்