மீண்டும் மோடி, வேண்டும் மோடி – கரூரில் பிரச்சாரத்தினை தொடங்கிய பா.ஜ.க வினர்

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (15:38 IST)
இந்திய பிரதமராக 5 ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சி வெற்றிகரமாக பல்வேறு சாதனைகள் புரிந்து மீண்டும் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில், உலகளவில் இந்தியாவினை திரும்பி பார்க்க வைத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமென்றும், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பா.ஜ.க கூட்டணி கட்சியே 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டுமென்றும் பா.ஜ.க கட்சியினர் பல்வேறு பிரச்சாரங்களை செய்து வரும் நிலையில், இளைஞரணி பா.ஜ.க சார்பில் கரூரில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்கின்ற இரு சக்கர வாகன பிரச்சாரத்தினை தொடங்கினார்.



கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் முருகானந்தம் இரு சக்கர வாகன பேரணியை தொடக்கி வைத்தார். பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த வாகன பேரணி நகரின் முக்கிய வழியாக சென்று கரூர் மாவட்டத்தில் உள்ள பட்டிதொட்டியெல்லாம் செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த இரு சக்கர வாகன பேரணியில், மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி கோட்ட இணை பொறுப்பாளருமான கரூர் கார்த்திக்., கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் மதலை தங்கவேல்., கரூர் நகர தலைவர் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சி.ஆனந்தகுமார்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்