கரூரில் 2-ம் வகுப்பு சாரண மாணவன் 2 புதிய உலக சாதனை!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (21:38 IST)
ஆங்கிலத்தில் மிக நீளமான 10 வார்த்தைகளை 40 நொடிகளிலும், 247 தமிழ் எழுத்துக்களை 28 நொடிகளிலும் கூறி புதிய உலக சாதனை படைத்த மாணவர்கள்.
 
கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் 2-ம் வகுப்பு பயிலும் சாரண மாணவர் திவ்யதர்ஷன் ஆங்கிலத்தில் மிக நீளமான 10 வார்த்தைகளை 40 நொடிகளிலும் 247 தமிழ் எழுத்துக்களை  28 நொடிகளிலும் கூறிய டிஸ்கவர் சாதனைப் புத்தக புதிய உலக சாதனை நிகழ்வு கரூர்  பரணி பார்க் சாரணர் திடலில் நடைபெற்றது.  
 
இந்நிகழ்ச்சிக்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவர் S.மோகனரங்கன், துணை தலைவர்  பத்மாவதி மோகனரங்கன், தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் C.ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினர். பரணி பார்க் சாரணர் மாவட்ட துணை தலைவர் M.சுபாஷினி, பரணி வித்யாலயா முதல்வர் S.சுதாதேவி, துணை முதல்வர் R.பிரியா, பரணி பார்க் முதல்வர் K.சேகர், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் P.சாந்தி முன்னிலை வகித்தனர்.
 
இந்த உலக சாதனை நிகழ்வில் டிஸ்கவர் உலக சாதனைப் புத்தக நடுவர் பாலாஜி கலந்து கொண்டு பரணி வித்யாலயா 2-ம் வகுப்பு சாரண மாணவர் திவ்யதர்ஷன் ஆங்கிலத்தில் 40 நொடிகளில் கூறிய மிக நீளமான 10 வார்த்தைகளும், 28 நொடிகளில் கூறிய 247 தமிழ் எழுத்துக்களையும் புதிய உலக சாதனைகளாக டிஸ்கவர் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்தார்.
 
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் C.ராமசுப்பிரமணியன் மற்றும் பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் R.பிரியா செய்திருந்தனர்.
 
புகைப்படம்:
கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் 2-ம் வகுப்பு சாரண மாணவர் திவ்யதர்ஷன் ஆங்கிலத்தில் மிக நீளமான 10 வார்த்தைகளை 40 நொடிகளிலும்,  247 தமிழ் எழுத்துக்களை  28 நொடிகளிலும் கூறிய டிஸ்கவர் புதிய உலக சாதனை நிகழ்வு.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்