ராஜாத்தி அம்மாளை அப்பல்லோ அனுப்ப தயக்கம் காட்டிய கருணாநிதி...

Webdunia
சனி, 15 அக்டோபர் 2016 (10:23 IST)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் சமீபத்தில் சென்ற விவகாரம் அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.


 

 
முதல்வர் அனுமதிக்கப்பட்டவுடன், நம் குடும்பத்தில் இருந்து ஒரு பெண், அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கருணாநிதியிடம், ராஜாத்தி அம்மாள் கூறியுள்ளார். ஆனால், அங்கு சென்றால், அதிமுகவினர் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என கருணாநிதி தயக்கம் காட்டினாராம். 
 
அதன் பின் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள், மருத்துவமனைக்கு சென்று வந்ததால், ராஜாத்தி அம்மாளை மருத்துவமனைக்கு செல்ல அனுமதித்தாராம் கருணாநிதி.  
 
சசிகலா - ராஜாத்தி அம்மாள்  சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்