மறுவாக்கு எண்ணிக்கை இல்லை.. நீதிமன்றம் செல்லுங்கள்: விஜய பிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில்..!

Mahendran

வெள்ளி, 14 ஜூன் 2024 (11:58 IST)
விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு அளித்திருந்த நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் தேர்தல் ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது என்றும், தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது என்றும்,  தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதியில் தோல்வி அடைந்த தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்த நிலையில் அந்த மனுவுக்கு தான் தற்போது தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்