மனைவி வீட்டில் இருந்து துணைவி வீட்டிற்கு சென்ற கருணாநிதி

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (21:47 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் இன்றி சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று அவர் தனது கோபாலபுரத்தின் வீட்டில் இருந்து சிஐடி வீட்டிற்கு சென்றுள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே பேரன் அருள்நிதியின் மகன் மகிழனின் புன்சிரிப்பை கண்டு பூரித்து போன கருணாநிதி உடலளவிலும் மனதளவிலும் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறினர். இன்னும் ஒருசில நாட்களில் அவர் தனது பழைய கம்பீர குரலில் பேசவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் மனைவியுடன் தங்கியிருந்தார். இதனையடுத்து இன்று அவர் தனது துணைவி வீடான சிஐடி நகர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் சில நிமிடங்கள் இருந்துவிட்டு பின்னர் மீண்டும் கோபாலபுரம் திரும்பினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்