மும்பையில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில், 40 வயது பெண் ஆசிரியை ஒருவர், கடந்த ஒரு வருடமாக 16 வயது ஆண் மாணவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் தகவல்படி, குற்றம் சாட்டப்பட்ட பெண் ஆசிரியை, ஆங்கில பாட ஆசிரியராகவும், அந்த மாணவன் 11 ஆம் வகுப்பு படித்தபோது அவனுக்கு ஆசிரியராகவும் இருந்துள்ளார். டிசம்பர் 2023 இல் நடைபெற்ற ஆண்டு பள்ளி விழாவுக்கான நடன குழுவை அமைப்பதற்கான பல்வேறு சந்திப்புகளின் போது, தனக்கு அந்த மாணவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக ஆசிரியை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஜனவரி 2024 இல் மாணவனிடம் பாலியல் சைகைகளையும் அவர் செய்துள்ளார்.
முதலில் மாணவன் தயக்கம் காட்டி, ஆசிரியரை தவிர்க்க தொடங்கிய அவர் மாணவனை கட்டாயப்படுத்தி ஆடையைக் களைந்து பாலியல் வன்கொடுமை செய்தார். அதன்பின் சில மாத்திரைகளை கொடுத்து பாலியல் உறவுக்கு இணங்க செய்துள்ளார்.
அந்த ஆசிரியை மீது POCSO சட்டம் பிரிவு 4 (ஊடுருவல் பாலியல் வன்கொடுமை), 6 (தீவிரமான ஊடுருவல் பாலியல் வன்கொடுமை) மற்றும் 17 (குற்றங்களை ஒழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.