அண்ணாமலை யாத்திரையில் நிறைய சத்தம் தான் இருந்தது.. செயல்பாடு இல்லை.. கார்த்திக் சிதம்பரம்

Siva

வெள்ளி, 1 மார்ச் 2024 (07:13 IST)
அண்ணாமலையின் யாத்திரையில் நிறைய சத்தம் தான் இருந்தது ஆனால் செயல்பாடு எதுவும் இல்லை என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற ரயில்வே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கார்த்திக் சிதம்பரம் அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய போது ’எம்ஜிஆர் ஜெயலலிதா பெயரை கூறினால் அதிமுக வாக்காளர்கள் தங்கள் பக்கம் சாய்வார்கள் என்ற அல்ப ஆசை மோடிக்கு இருக்கிறது என்று ஆனால் அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை எங்கு இருக்கிறது அங்கு தான் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார்.

திமுக உள்பட திராவிட கட்சிகள் தமிழகத்தில் காணாமல் போக வாய்ப்பு இல்லை என்றும் மோடியின் ஆசை நிறைவேறாது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

அண்ணாமலையின் யாத்திரையில் வெறும் சத்தம் மட்டும் தான் இருந்தது என்றும் செயல்பாடு எதுவும் இல்லை என்றும் அவரை ஊடகங்கள் தான் பூதக்கண்ணாடி போட்டு காட்டுகிறார்கள் என்றும் வாக்கு எண்ணும் போது பாஜகவின் உண்மையான நிலை தெரியும் என்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்