கர்நாடக இடைத்தேர்தல் - ஜெயநகர் தொகுதியில் 55 சதவீதம் வாக்குப்பதிவு

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (08:09 IST)
கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியில் நேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
 
ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், ஆர்.ஆர் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டின் ஒன்றில் வாக்காளர் அடையாள அட்டை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாலும், இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில் ஜெயநகர் தொகுதிக்கு ஜூன் மாதம் 11-ம்  தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  அதன்படி இந்த தொகுதியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி  மாலை 6 மணிவரை நடைபெற்றது.  
 
216 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் 55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், பதிவாகிய வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்