தமிழகத்திற்கு அக்டோபர் 15 வரை வினாடிக்கு 3000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற ஆணையத்தின் உத்தரவு குறித்து கர்நாடக முதல்வர் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என கர்நாடகா நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் பேட்டி அளித்துள்ளார்.
காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்த விவகாரம் தற்போது உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் அக்டோபர் 15ஆம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 அடி கன அடி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக நிறுவனத் துறை அதிகாரிகள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை கர்நாடக மாநிலம் மதிக்காமல் இருப்பதாக குற்றம் காட்டப்பட்டுள்ளது,.
இந்த நிலையில் இது குறித்து கர்நாடக முதல்வர் அவசர ஆலோசனை செய்ய இருப்பதாக கர்நாடக மாநில நீர் வளத்துறை செயலாளர் ராஜேஷின் பேட்டி அளித்துள்ளார்.