இன்னும் சில மணி நேரத்தில் 6 மாவட்டங்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (07:50 IST)
இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை மழை பெய்யும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரித்து உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் தமிழ்நாட்டில் உள்ள  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் தேனி  ஆகிய ஆறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அறிவிப்பு வெளியேற்றப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்