சமீபத்தில் நடந்த காங்கிரஸ் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் கராத்தே தியாகராஜன், ‘உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்’ என்று பேசி திமுக – காங்கிரஸ் இடையே விரிசலை உண்டாக்கினார். இதற்கு எதிரிவினையாற்றிய திமுக திருச்சி மாவட்ட செயலாளர் கே என் நேரு, ‘திமுக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும்’ என முழங்கினார்.
அடுத்தடுத்த நாட்களில் இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் இப்படி மாறி மாறி பேசியதால் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ், திமுக உறவு நீடிக்குமா என்ற அளவுக்கு விவாதங்கள் எழுந்தன. இந்த விஷயத்தில் திமுக வின் கே என் நேரு ‘இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நான் ஒரு மாவட்ட செயலாளராக என்னுடையக் கருத்தை தலைமைக்கு தெரியப்படுத்தினேன்’ என விளக்கம் அளித்தார்.
ஆனால் தான் பேசியது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத கராத்தே தியாகராகன் காங்கிரஸ் முன்னணி தலைவர் ப சிதம்பரத்தின் அறிவுரையின் பேரின் இப்போது தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்துகளைத் தெரிவித்தேன். அது பரபரப்பாக கே என் நேரு அவர் கருத்தை வெளியிட்டார். நேரு அண்ணன் அவர் கூறியது அவருடையத் தனிப்பட்ட கருத்து எனக் கூறியுள்ளார். அதுபோல நான் கூறியது என்னுடையத் தனிப்பட்ட கருத்து. அது திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரானது அல்ல’ எனத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.