நாளை சிவராத்திரி கொண்டாட்டம்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
திங்கள், 28 பிப்ரவரி 2022 (15:02 IST)
நாளை இந்தியா முழுவதும் சிவராத்திரி கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தில் முக்கடவுள்களில் ஒருவரான சிவபெருமானுக்கு உகந்த நாளாக பௌர்ணமி சிவராத்திரி இருந்து வருகிறது. இந்த நாளில் மக்கள் சிவன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கன்னியாக்குமரியில் சிவராத்திரிக்கு கோவிலில் வழிபட மக்கள் அதிகமாக வருவார்கள் என்பதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.